அய்யம்பாளையம்

வட ஆற்காடு மாவட்டம் ஆரணி, திருவண்ணாமலை ஆகிய வட்டங்களிலும்,
கோயம்புத்தூர் மாவட்டம் அவனாசி, ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய
வட்டங்களிலும், மதுரை மாவட்டம் திண்டுக்கல், பழனி வட்டங்களிலும்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி, முசிரி வட்டங்களிலும் இவ்வூர்ப் பெயர்
இருப்பதை அறியமுடிகிறது.  சுவடியில்,
“கோயமுத்தூர் ஜில்லா தாராபுரந் தாலுகா அய்யம்பாளையம்” (1144-த)
என்றிருப்பதைக் காணும்போது இங்குக் குறிப்பிட்ட ஊர் மேலே குறிப்பிட்ட
கோயம்புத்தூர் மாவட்டத்து நான்கு வட்டங்களிலும் அன்றி வேறொரு வட்டமான
தாராபுரத்தில் அமைந்திருப்பதைக் குறிப்பிட்டிருப்பதைக் காணும்போது தாராபுரம்
வட்டத்தில் அய்யம்பாளையம் என்றொரு ஊர் இருக்கின்றா? இல்லை, வட்டப் பகுதிகள்
மாற்றமடைந்ததில் மேலே குறிப்பிட்ட நான்கு வட்டங்களில் எந்த வட்டத்தில் இவ்வூர்
இடம்பெற்றுள்ளது? காலத்தை நிர்ணயம் செய்தபின் இவ்வூர் இடம்பெற்ற சுவடியின் சுவடி
எழுந்த காலத்தை ஓரளவுக்குத் தீர்மானிக்கலாம்.