தருசசனுடைய பகை மன்னர்களில் ஒருவனாக அயோத்தி அரசன் குறிக்கப்பெறும் நிலையில் அயோத்தி என்ற ஊர்ப்பெயர் பெருங்கதையில் இடம் பெற்றுள்ளது. ஊரைப்பற்றிய வேறு தகவல்கள் ஒன்றும் விளக்கிக் கூறப்பெறவில்லை, அயோத்தி என்ற ஊர் கோக்ரா நதியின் கரையில் பைஜா பாத்துக்கு அருகில் இருக்கிறது. இராமன் பிறந்த நகரம் இது என்று கருதுகின்றனர். ஒருகாலத்தில் அயோத்தி ஒரு மாகாணமாக இருந்தது. இன்று உத்தரப்பிரதேச இராச்சியத்தில் சேர்ந்துள்ளது.
அருந்திறற் சூழ்ச்சி யடல் வேத்றானை
அயிர்த் துணைப் பல்படை யயோத்தி யரசனும் (பெருங், 3: 17:20 21)