உயர்திணைப்பொருள் பற்றி வரும் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்மூன்று பகுதிய என்பது. ஆண் பெண் அலி – ஆண்பன்மை – பெண்பன்மை – ஆண்பெண் பன்மை – அலிப்பன்மை – இவையெல்லாம் தொக்க பன்மை – எனப்பலவகைப்படுமால் எனின், ஆசிரியர் பொருள் நோக்கிக் கூறினாரல்லர்;சொல்முடிபு மூவகை என்றே கூறினார். ஆண் பன்மையும் பெண்பன்மையும்இவ்விரண்டும் தொக்க பன்மையும் ‘வந்தார்’ என்றாற் போலவே முடிதலின்,உயர் திணை முப்பாலினுள் அடங்கின. முப்பாற்சொற்களாவன ஆண் – பெண் – பலர்என்பன. (தொ. சொ. 2. தெய். உரை)