அம் ஆம் – என்ற இந்த இரண்டு விகுதிகளையும் ஈறாக உடைய மொழிகள்முன்னிலையிடத்தாரையும், எம் ஏம் ஓம் – என்ற இந்த மூன்று விகுதிகளையும்ஈறாக உடைய மொழிகள் படர்க்கையிடத்தாரையும், உம் இடைச்சொல்லை ஊர்ந்த க டத ற ஒற்றுக்களாகிய கும் டும் தும் றும் என்னும் இந்நான்குவிகுதிகளையும் ஈறாக உடைய மொழிகள் முன்னிலை படர்க்கை என்னும் இரண்டுஇடத்தாரையும் தன்னுடன் கூட்டும் உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினை,வினைக் குறிப்பு முற்றாம்.உம்மைகளை ஐயவும்மையாக்கி, அம் ஆம் – என்பன முன்னிலையாரையாயினும்படர்க்கையாரையாயினும், உண்டனம் உண்டாம் யானும் நீயும் – எனவும்,உண்டனம் உண்டாம் யானும் அவனும் – எனவும் தம்மொடு படுக்கும் என வும்;ஆக்கவும்மைகளாக்கி அம் ஆம் என்பன முன்னிலை யாரையும் படர்க்கையாரையும்உண்டனம் உண்டாம் யானும் நீயும் அவனும் – என ஒருங்கு தன்னொடு படுக்கும்- எனவும் காண்க. (நன். 332 சங்.)