அம்ம

அம்ம என்னும் இடைச்சொல் ‘யான் ஒன்று கூறுகிறேன், கேள்’ என்றுஒருவர்க்குக் ‘கேட்பிக்கும்’ பொருண்மையை உணர்த்தி நிற்கும். இதனைத்தொல்காப்பியனார் ‘உரைப் பொருட் கிளவி’ (எ. 210, 212 நச்.) என்றுகுறிப்பிடுவர். இது படர்க்கையானை முன்னிலையான் ஆக்கும் விளிப்பொருட்-கண் வரும். இஃது அம்மா என நீண்டும் தன் பொருளை உணர்த்தும்.எ-டு : அம்மா கொற்றா. (தொ. சொ. 278, 155 நச். உரை)