பொருட்புணர்ச்சிக்கண் கீழ்க்கண்ட சொற்கள் நிலைமொழி- யாம்.
புளி என்னும் மரப்பெயர் – புளியங்கோடு, புளியஞெரி
(தொ. எ. 244 நச்.)
எரு, செரு என்னும் சொற்கள் – எருவங்குழி, செருவக்களம் (260)
பனை, அரை, ஆவிரை என்னும் மரப்பெயர்கள் – பனங்காய், அரையங்கோடு,
ஆவிரங்கோடு (283)
ஆண் என்ற மரப்பெயர் – ஆணங்கோடு (304)
எகின் என்ற மரப்பெயர் – எகினங்கோடு (336)
னகர ஈற்று இயற்பெயர்முன்னர் மக்கள் முறைப்பெயர் – கொற்றங்கொற்றன்,
சாத்தங்கொற்றன் (350)
பீர் என்னும் சொல் – பீரங்கொடி (365)
பூல், வேல், ஆல் என்னும் மரப்பெயர்கள் – பூலங்கோடு, வேலங்கோடு,
ஆலங்கோடு (375)
குமிழ் என்ற மரப்பெயர் – குமிழங்கோடு (386)
குற்றுகர ஈற்றுச் சொற்கள் ஆகிய ஏறு, சூது, வட்டு, புற்று முதலியன –
ஏறங்கோள், சூதம்போர், வட்டம் போர், புற்றம் பழஞ்சோறு முதலாகப்
புணரும். (417)
இவற்றுள், செரு என்பதன்முன் அம்மின் இறுதி கெடும்; பனை ஆவிரை
என்பவற்றின் ஈற்று ஐகாரம் கெடும்; னகர ஈற்று இயற் பெயரின் ஈற்று அன்
கெட்டு அம்முப் புணரும் என்பன கொள்க.