அம்முச் சாரியையின் மகரம் வருமொழி முதற்கண் ககர சகர தகரங்கள்
வருமிடத்து முறையே ஙகர ஞகர நகரங்களாகத் திரியும்; வருமொழி முதற்கண்
மென்கணமும் இடைக்கண மும் வருமிடத்தே கெடும். உயிர்க்கணம் வருமிடத்தே
மகரம் கெடுதலும் அம்முச் சாரியை முழுதும் கெடுதலும் ஆம். (பகரத்திற்கு
இனமெல்லெழுத்து மகரம் ஆதலின், பகரம் வருமொழி முதற்கண் வருமிடத்து
அம்முச் சாரியையின் மகரம் இயல்பாகவே நிற்கும்.)
எ-டு : புளி + அம் + கோடு = புளிய
ங் கோடு; புளி + அம் + செதிள் =
புளிய
ஞ் செதிள்; புளி + அம் + தோல் =
புளிய
ந் தோல்; புளி + அம் + ஞெரி =
புளிய ஞெரி; புளி + அம் + யாழ் = புளிய யாழ்; புளி + அம் + இலை =
புளிய விலை (வகரம் உடம்படுமெய்); புளியிலை (யகரம் உடம்படுமெய்); (புளி
+ அம் + பழம் = புளியம்பழம் – இயல்பு)(தொ. எ. 129, 130
நச்.)