அம்மானை (3)

2, 4, 5 ஆம் அடிகளில் அம்மானை என்ற சொல் ஈற்றில் அமைய வரும்.அம்மானை 5 அடிக் கலிப்பாப் போல்வது. அதனில் சொல்லலும் மறுத்தலும்விடையும் அமையும். அம்மானையின் விடைமொழி சிலேடையாக அமையும்.ஓரடியெதுகையின்றி இரண்டிரண்டடி எதுகையுடைய கலிப்பாவாக அம்மானைப்பாடல்அமைதலு முண்டு. கொச்சகச்சீரால் பாடும் அம்மானை இழிபுடையது. (அறுவகை.யாப்பு. 31, 32)சந்த ஆசிரிய விருத்தமாகப் பாடப்படும் அம்மானைப் பருவம்பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் நிகழும். ஈற்றடி அம்மானைஆடியருளே போன்ற வாய்பாட்டால் முடியும்.