மகளிர் அம்மானை ஆடும்போது பாடும் ஒருவகையான இசைப்பாடல். இஃதுஐந்தடிப் பாடலாக நிகழும்.(சிலப். 29 : 17 – 20)வெண்டளை பயின்ற அளவடியால் நிகழும் இப்பாடல்களில் இரண்டு நான்குஐந்தாமடிகளின் இறுதிச்சீர் அம்மானை என முடிவுறும். இரண்டாமடிமூன்றாமடியிலும் அந்தாதித்து வரும்.எ-டு : ‘வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்// ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை? // ஓங்கரணம் காத்த உரவோன்உயர்விசும்பில் // தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை! //சோழன் பூம்புகார் பாடலோர் அம்மானை!’ (சிலப். 29: 17)