அம்மனை மடக்கு

1) கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிர் இருவர் இருபொருள்படக்கூறுவதாக இயற்றும் பாட்டு. கலம்பகப் பிரபந்தத்துள் இஃது அம்மானைஎன்னும் உறுப்பாக ஐந்தடியால் வெண்டளை யாப்பிற்றாக நிகழும்.2) அம்மனையைக் கைக்கொண்டு ஆடும் மகளிர் இருவருள் ஒருத்திதலைவன்ஒருவனை வஞ்சப்புகழ்ச்சி அணியால் ஒருவாறு வருணித்தலும், மற்றவள்அச்செய்யுள் இடைப் பட்ட அடியை மடக்காய் அந்தாதித்து அவ்வருணனை பற்றிவினவுதலும், அதன்பின் முதலாமவள் தான் கூறியது பிழை யாதபடிசிலேடைவாய்பாடு அமைய விடை கூறுதலும் ஆகிய அம்மனைப் பாடலில் காணப்படும்மடக்கு அம்மனை மடக்காம். (மா. அ. 267)எ-டு : ‘தேன்அமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்ஆனவர்தாம் ஆண்பெண் அலிஅலர்காண் அம்மானை’என்றாள் முதலாமவள். இரண்டாமவள் அவ்விரண்டாம் அடியினைஅந்தாதித்து ‘ஆனவர்தாம் ஆண்பெ ண் அலி அலரே ஆமாகில், சானகியைக்கொள்வாரோ தாரமா அம்மானை ’ என வினவினாள். உடனே முதலாமவள் அதற்கு விடையாக,‘தாரமாக் கொ ண்டதுமோர் சாபத்தால்அம்மானை’ என, சாபம் என்ற சொல் வில் எனவும், சாபமொழி எனவும் இருபொருள்படச் சிலேடையாய் விடைகூறி முடித்தவாறு. (திருவரங்கக் 26)அம்மானையாடும் மகளிர் மூவராகக் கொண்டு கூற்று நிகழ்த்துவதாகக் கூறலும்உண்டு; முன்றா மவள் சிலேடை யாக விடை கூறுவதாகக் கொள்க.