அம்போதரங்க ஒருபோகு

அகநிலை ஒத்தாழிசை, ஏனை ஒத்தாழிசை என ஒத்தாழிசை இருவகைப்படும்.அவற்றுள் ஏனை ஒத்தாழிசை வண்ணகம், ஒரு போகு என இருவகைப்படும். அவற்றுள்ஒரு போகு, கொச்சக ஒரு போகு எனவும் அம்போதரங்க ஒரு போகு எனவும்இருவகைப்படும். அம்போதரங்க ஒரு போகின் இடையளவு அறுபதடியும், தலையளவுஅதன் இரட்டி யாகிய நூற்றிருபதடியும், கடையளவு பதினைந்தடியும் எனக்கொள்க. பிற செய்திகள் உரிய தலைப்பிற் காண்க. (தொ. செய். 147, 151நச்.)மயேச்சுரரால் சொல்லப்பட்ட அம்போதரங்கமும் வண்ண கமும் என்றிரண்டுதேவபாணியும் திரிந்து, தரவு ஒழித்து அல்லா உறுப்புப் பெறினும், தாழிசைஒழித்து அல்லா உறுப்புப் பெறினும், அம்போதரங்கத்துள் ஓதப்பட்ட மூவகைவண்ணகத்துக்கு ஓதப்பட்ட இருவகை எண்ணும் நீங்கினும், நீங்கியஉறுப்பொழியத் தனிச்சொல்லும் சுரிதக மும் பெற்று வருவன ‘ஒருபோகு’எனப்படும். அவை அம்போதரங்க உறுப்புத் தழீஇயின அம்போதரங்க ஒருபோகு ஆம்.(யா. வி. பக். 342)