அம்போதரங்க ஒருபோகு எருத்து, கொச்சகம், அராகம், சிற்றெண்,அடக்கியல் என்னும் தன் ஐந்து உறுப்புக்களும் கூடத் தலையளவு 120 அடி,இடையளவு 60 அடி, கடையளவு 15 அடி என்னும் எல்லையைப் பெறும். எனவேதலையளவு 61 முதல் 120 அடி, இடையளவு 31 முதல் 60 அடி, கடையளவு 15 முதல்30 அடி அளவாம்.120 அடியுடைய அம்போதரங்க ஒரு போகிற்கு, தரவு 20 அடி; அடக்கியல் 20அடி; சிற்றெண் 16 அடி, அராகம் 4 அடி, ஆக 60 அடி; பத்தடிக் கொச்சகம்ஆறு என 60 அடி; ஆக 120 அடியாம். 60 அடியுடைய அம்போதரங்க ஒருபோகிற்கு,தரவு 10 அடி; அடக்கியல் 10 அடி; சிற்றெண் 8, அராகம் 2 அடி ஆக 30 அடி;பத்தடிக் கொச்சகம் மூன்று என 30 அடி; ஆக 60 அடியாம்.15 அடியுடைய கடையளவு அம்போதரங்க ஒருபோகிற்கு தரவு 2 அடி; அடக்கியல்2 அடி; இரண்டடிக் கொச்சகம் மூன்று என 6 அடி; சிற்றெண் 4 அடி, அராகம்ஓரடி, ஆக 15 அடியாம். இவை இக்காலத்து வீழ்ந்தன. (தொல்.செய். 151நச்.)