அம்போதரங்க ஒத்தாழிசை :பெயர்க்காரணம்

அம்பு + தரங்கம் – நீர் அலை. அம்புதரங்கம் எனற்பாலது அம்போதரங்கம்என மருவிற்று. நீர்த்திரைபோல் ஒரு காலைக்கு ஒருகால் சுருங்கிவரும்அழகிற்றாய் ஒழுகும் அம்போதரங்க உறுப்பினை உடையதாய், தரவு தாழிசைஅம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புக்களொடுநிகழ்வது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலியாம். (யா. க. 80 உரை)