தரவும் சுரிதகமும் ஆறடியால் வந்து, நான்கடியாய்த் தாழிசை மூன்றுவந்து, தாழிசையின் பின்னர்த் தனிச்சொல் முன்னர் இரண்டடியால் ஓர்அராகம் வந்து, அதன்பின் இரண்டடி யால் இரண்டு பேரெண்வந்து, ஓரடியால்நான்கு இடை யெண் வந்து, சிற்றெண் இருசீரால் எட்டாய், அவை இரண்டு கூடிஓரடியே போன்று, இம் முறை இம்மூன்று அம்போ தரங்க உறுப்பும் பெற்றுமுடிவது தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனவும்,தரவும் சுரிதகமும் ஐந்தடியால் வந்து, தாழிசை மூன்றும் மூன்றடியால்வந்து, தாழிசையின் பின்னர்த் தனிச்சொல் முன்னர் இரண்டடியால் ஓர்அராகம் வந்து, அதன்பின் இரண்டு ஓரடியால் பேரெண் அறுசீரால் வந்து, இடையெண் நான்கு ஓரடியால் முச்சீராய் வந்து, எட்டுச் சிற்றெண் ஒரு சீரும்ஓரசையுமாய், இம்மூன்று அம்போதரங்க உறுப்பும் பெற்று முடிவது இடையளவுஅம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனவும்,தரவும் சுரிதகமும் நான்கடியால் வந்து, ஈரடியால் மூன்றுதாழிசைவந்து, தாழிசையின் பின்னர்த் தனிச்சொல் முன்னர் இரண்டடியால் ஓர்அராகம் வந்து, ஓரடியால் இரண்டு பேரெண் வந்து, இரு சீரால் நான்குஇடையெண் வந்து, ஒரு சீரால் எட்டுச் சிற்றெண் வந்து இம்மூன்றுஅம்போதரங்க உறுப்பும் பெற்று முடிவது கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா எனவும் வேண்டுவர். (ஓரடி நான்கு அளவெண் என்றலே ஏற்றது.)தலையளவு எ-டு : ‘அலைகடல் கதிர்முத்தம்’ யா. வி.பக். 308இடையளவு எ-டு : பிறப்பென்னும்’ யா. வி.பக். 310கடையளவு எ-டு : ‘கடையில்லா’ யா. வி. பக். 311இவை தலை இடை கடையளவுப் பெருந்தேவபாணிகள் (யா. க. 83 உரை).இம்மூன்றும் அளவியல் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா; ஏனைய அளவழிஅம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. (யா. க. 83)