அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

அராக உறுப்பை நீக்கி, தரவு தாழிசை அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம்என்னும் ஐந்துறுப்பானும் வருவதொரு கலிப்பா (வீ. சோ. 117.)கரைசாரக் கரைசார ஒருகாலைக்கு ஒருகால் சுருங்கி வரு கின்ற கடலலைபோல, நாற்சீரடியும் முச்சீரடியும் இருசீரடி யும் ஆகிய அசையடிகளைத்தாழிசைக்கும் தனிச்சொற்கும் நடுவே தொகுத்து, தரவு தாழிசை அம்போதரங்கம்தனிச் சொல் சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புடையதாய் வருவது அம்போதரங்கஒத்தாழிசைக் கலிப்பா. அசையடிதான் நாற்சீர் ஈரடியால் இரண்டும்,நாற்சீர் ஓரடியால் நான்கும், முச்சீர் ஓரடியால் எட்டும், இருசீர்ஓரடியால் பதினாறுமாய் வருவது சிறப்புடைத்து; எட்டும், பதினாறும்எனப்பட்டவை நான்கும் எட்டுமாய்க் குறைந்து வரப்பெறினும் அமையும். (யா.கா. 31, உரை)