அம்போதரங்கம் (2)

கலிப்பா உறுப்புக்களுள் ஒன்று அம்போதரங்கம். பல உறுப்புக்களும்முறையே சுருங்கியும் ஒரோவழிப் பெருகியும் முடுகியும் கடைக்கண்விரிந்து நீர்த்தரங்கம் போறலின் அம்போதரங்கம் என்றார். (தொ.செய். 148நச்.) அம்போ தரங்கம், பேரெண் அளவெண் இடையெண் சிற்றெண் என்னும்இவ்வுறுப்புக்களைக் குறிக்கும் என்பது பின்னூலார் கருத்து.