இன்று கோயில் திருமாகாளம் என்று வழங்கும் இப்பெயர், அம்பர் ” என்ற ஊரில் உள்ள இக்கோயிலைத் தனித்துணர்த்த அம்பர் மாகாளத்தினின்றும், கோயில் மாகாளம் குறிக்கப்பட்டதாக இருக்கலாம். மேலும் இங்குள்ள கோயிற் சிறப்பையும் இப்பெயர் காட்டுகிறது. அம்பன், அம்பாசூரன் என்னும் அசுரர்களைக் கொன்ற பாவம் தீர, காளி இறைவனைப் பூசித்து வழிப்பட்ட தலம் என்ற எண்ணம் மேலும் ஒரு கருத்தை யும் தருகிறது. அதாவது அம்பர் என்ற ஊர்ப்பெயர் மிகப் பழமையான தொன்றாக, அமைய, இப்புராணக்கதை, சமய மலர்ச்சி பெற்ற இக்காலத்து எழுந்ததொரு புராணக்கதை என்பதை இவண் வெளிப்படையாகக் காண்கின்றோம். காளி தொடர்பாக மாகாளம் என்ற பெயர் அல்லது மாகாள ரிஷி பூசித்தமை காரணமாக, மாகாளம் என்ற பெயர் கோயிலுக்கு அமைந்து இருக்கக்கூடும். இத்தலம் முதற் குலோத்துங்கன் காலத்தில் அம்பர் நாட்டு அம்பர் திரு மாகாளம் எனவும், இராகசேசரி வர்மனான குலோத்துங்கள் காலத்து பூபால குலவல்லி வள நாட்டு அம்பர் நாட்டு அம்பர் மாகாளம் எனவும் வழங்கப் பட்டது என அறிகின்றோம் ! எனவே அம்பர் நாட்டின் நடுப்பகுதியாக மாகாளம் இருந்தது தெளிவாகின்றது. தனிப்படுத்தவே கோயிற் மாகாளம் எனப் பின்னர் குறிப்பிடத் தொடங்கினர் என்பதும் தெளிவாகிறது. இரண்டு ஊர்களும் சம்பந்தர் பாடல் பெற்று சிறக்கின்றன. அம்பர் மாகாளம் அரிசிலாற்றங்கரையில் இருக்கும் ஊர் என்பதை ஞானசம்பந்தரின்,
“மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம்” ( 239-1 ) எனக் காட்டுகிறது.