அமராபதி

அமராபதி என்னும்‌ ஊர்ப்பெயர்‌ பெருங்கதையில்‌ இடம்‌ பெற்றிருக்கிறது. இந்திரன்‌ உறையும்‌ அமராபதி என்றும்‌, வாச வதத்தை அமராவதியைக்காண வேண்டும்‌ என்று ஆவல்‌ கொண்டாள்‌ எனவும்‌ கூறப்பெற்றுள்ளது. அமராவதி என்ற பெயருடைய ஒருநகர்‌ குண்டூர்‌ மாவட்டத்‌தில்‌ கிருஷ்ணா ஆற்றங்கரையில்‌ உள்ளது, இது சாதவாகன அரசர்‌களின்‌ கீழைத்தலை நகரமாய்‌ இருந்துள்ளது.
“அமையாச்‌ செய்‌ தொழிலவுணர்க்‌ கடந்த
இமையாச்‌ செங்கணிந்திரனுறையும்‌
அமராபதியும்‌ நிகர்‌ தனக்கன்றித்‌
துன்ப நீக்குந்‌ தொழிலிற்றாகி
இன்பங்‌ கலந்த விராசகரிய மென்‌
றெண்டிசை மருங்கனுந்‌ தன்‌ பெயா்‌ பொறித்த
மன்பெருஞ்‌ சிறப்பின்‌ மல்லன்‌ மாநகர்‌” (பெருங்‌. 3;3:110 119)
“கைவைத்‌ தொழியக்‌ கடந்து சென்றுப்‌ பால்‌
அமராபதியு மந்தரத்‌ தெல்லையும்‌
நுகர்‌ பூங்காவு நோக்குபு வருதற்‌
குற்ற தென்மனனு முணர்‌ வினளாகி” (௸.5;1:190 193)