அப்பொருட்கிளவி

அப்பொருள் என்றது, அன்ன பொருளை; ‘இவ்வாடையும் அந்நூலான் இயன்றது’என்றது போல. இச்சொற்றொடர் நான்காம் வேற்றுமை முடிக்கும் சொல் பற்றியநூற்பாவில் உள்ளது. ‘அப்பொருட் கிளவியும்’ என்றதனான், பிணிக்குமருந்து – நட்டார்க்குத் தோற்கும் – அவற்குத் தக்காள் இவள் -உற்றார்க்கு உரியர் பொற்றொடி மகளிர் – என்பன போல்வன கொள்ளப்படும்.(தொ. சொ. 76 சேனா. உரை)இச்சொற்குப் பொருள் இது, அவற்குச் சோறுண்டு, நினக்கு வலி வாள்,அவ்வூர்க்கு இவ்வூர் காதம், ‘ மனைக்குப் பாழ் வாணுதல்இன்மை’, (நான். 20) ‘போர்க்குப் புணைமன்’ (பு.வெ. 80), ‘ த ன் சீர்இயல் நல்லாள்தான் அவற்குஈன்ற மைந்தன்’ – என்றாற் போல்வன கொள்க. (தொ. சொ. 77 நச். உரை)மக்கட்குப் பகை பாம்பு – போல்வன கொள்க. (தொ. சொ.77 ப. உரை)இவ்வூர்க்கு அவ்வூர் காதம், நாளைக்கு வரும், இவற்குத் தகும் இது,இவர்க்கு நன்மை பயக்கும், அவற்குப் பிறந்த மகன் – பிறவும் இந்நிகரனஎல்லாம் கொள்க. (தொ. சொ. 74 தெய். உரை)பண்ணிற்குத் தக்கது பாட்டு, பூவிற்குத் தக்கது வண்டு – என்பன போலவருவனவும் கொள்க. (தொ. சொ. 74 இள. உரை)