அப்பர் தேவாரயாப்பு

திருநேரிசை – அறுசீர் விருத்தம்; திருவிருத்தம் – கட்டளைக்கலித்துறை; திருக்குறுந்தொகை – கலிவிருத்தம்; திருத்தாண் டகம் -எண்சீர் விருத்தம்; பழமொழியாப்பு – பழமொழியை இறுதியில் கொண்ட அறுசீர்விருத்தம்; சரக்கறைத் திரு விருத்தம் – கட்டளைக் கலித்துறையாலமைந்தவருக்கமாலை; இவையன்றித் கலித்தாழிசைப் பதிகம் இரண்டும் ( iv 3, 4) ஆசிரியத்துறைப் பதிகம் ஒன்றும் ( iv .20) சிறப்பாக அமைந்தன. நான்காம் திருமுறைத் தொடக்கத்தில் பலவகைஅறுசீர் விருத்தங்களும் தரவு கொச்சகமும் கலிவிருத்தமும் ஈரடிக்கலித்தாழிசையும் (அங்கமாலைப் பதிகம்) எனப் பலதிற யாப்புக் காணலாம்.(இலக். தொகை. முன். பக். 83-85)