ஈவோன் ஏற்போன் – என்பாரிடை வேற்றுமையின்றி ஒருவனே இருவரும் ஆதல்.இப்பொருளில் வரும் நான்காம் வேற்றுமை.எ-டு : ‘அருமறை சோரும் அறிவிலான்செய்யும்பெருமிறை தானே தனக்கு’ (குறள். 847)இக்குறளில், ‘அறிவிலான் தானே தனக்குத் தீங்கு செய்து கொள்வான்’ எனவருதலின், ஈவோனும் ஏற்போனும் ஒருவனே ஆதல் காண்க. (பி. வி. 13)