எல்லையாகிய அவதி என்னும் ஐந்தாம் வேற்றுமை. நீக்கம் என்பது இதன்பொருள். இஃது அசலம் (நிலையானது), சலம் (இயங்குவது) என இருபொருளில்வரும். எதனின்நின்றும் நீக்கம் நிகழுமோ, அது சலமும் அசலமும் ஆம்.எ-டு : -வெகிச்சீமை என்னும் புறப்பாட்டு எல்லை என்பதும் இதற்குப்பொருளாம்.எ-டு : ‘குற்றத்தின் நீங்கி’ (கு. 502) -குற்றத்தின் எல்லையி னின்றும் நீங்கி;‘சிறுமையின் நீங்கிய’ (கு. 98) – சிறுமையின்எல்லையி னின்றும் நீங்கிய (பி. வி. 11)