அ) உருபு புணர்ச்சி: அது இது உது என்னும் சுட்டுப் பெயர்கள்
அன்சாரியை இடையே வர உருபொடு புணர்ந்து, நிலை மொழி உகரம் கெட, அது +
அன் + ஐ
> அத் + அன் + ஐ = அதனை
என்றாற் போலப் புணரும். (தொ. எ. 176 நச்.) ஏழ் என்பது உருபோடு
அன்சாரியை பெற்றுப் புணரும். ஏழனை என வரும். (194) குற்றியலுகர ஈற்று
எண்ணுப்பெயர்கள் அன்சாரியை பெற்று உருபொடு புணரும். ஒன்றனை, இரண்டனை
என வரும். (198) யாது என்ற வினாப்பெயரும், அஃது இஃது உஃது என்ற
சுட்டுப் பெயர்களும் அன்சாரியை பெற்று உருபேற்கும். அஃது
முதலியவற்றின் ஆய்தம் கெடும். யாதனை, அதனை, இதனை, உதனை என வரும்.
(200)
ஆ) பொருட்புணர்ச்சி: அது இது உது என்பன பொருட் புணர்ச்சிக்கண்
அதன்கோடு – இதன்கோடு – உதன்கோடு – என்றாற் போல அன்சாரியை பெற்று
முடியும். (263); ஏழ் என்னும் எண்ணுப்பெயர், ஏழன்சுக்கு – ஏழன்காயம் –
என்றாற் போல அன்சாரியை பெறும். (388); குற்றுகர ஈற்று எண்ணுப் பெயர்,
ஒன்றன் காயம் – ஒன்றன் சுக்கு – என்றாற் போல அன் சாரியை பெறும்.
(419); பெண்டு என்னும் சொல்லும் பெண் டன்கை என்றாற் போல் அன்சாரியை
பெறும். (421); யாது அஃது இஃது உஃது என்பன உருபு புணர்ச்சி போலப்
பொருட் புணர்ச்சிக்கண்ணும் யாதன்கோடு – அதன்கோடு – இதன்கோடு –
உதன்கோடு – என்றாற் போல அன்சாரியை பெறும். (422)