அன்று, அல்ல என்னும்சொல்லிலக்கணம்

அன்று, அல்ல – என்பன ஒருமையும் பன்மையும் உணர்த்தும் அஃறிணைக்குறிப்புமுற்றுக்களாம். இவை ‘உழுந்து அன்று பயறு’, ‘உழுந்தல்ல பயறு’எனப் பண்புணர்த்தியும், ‘வேலன் று வென்றி தருவது’ (குறள் 546), ‘படையல்ல வென்றி தருவன’ எனக் குறிப்புணர்த்தியும்நிற்கும். (தொ. சொ. 222. நச். உரை)