அன்றி, இன்றி என்ற வினையெச்சம்

அன்றி, இன்றி என்ற குறிப்பு வினையெச்சங்கள் வன்கணம் வரின்
பொதுவிதியால் வல்லெழுத்து மிக்கு முடியும். இகர ஈறு உகரமாகத் திரிந்து
அன்று – இன்று – என்றாகுமிடத்து இயல்பாகப் புணரும்.
எ-டு : ‘நாளன்று போகி’
(புறநா. 124),
‘உப்பின்று புற்கை யுண்க’
(நன். 173)