இன்றி என்னும் வினையெச்சம் இன்று எனக் குற்றியலுகர ஈறாகத்
திரிந்தவழி, வருமொழி வன்கணம் வரினும் இயல் பாகப் புணரும்.
‘வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்’
(பொ. 111. ந
ச்.)
‘பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்’
(பொ. 151
. நச்.)
‘காய்வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும்
(பொ. 151. நச்.)
‘தாஇன்று உரிய தத்தம் கூற்றே’
(பொ. 241. நச்.)
எனத் தொல்காப்பியத்தில் ‘இன்றி’ என்பது செய்யுளின்பம் கருதி
‘இன்று’ என வழங்கப்பட்டது.
‘அதுவன்றி’ என்பது அதாஅன்று எனத் திரிந்து வந்துள்ளது.
இன்றி என்ற சொல்லிலுள்ள இரண்டு இகரமும் காதுக்கு இனிமையாக
இராமையான், ஒன்று உகரமாக மாறியிருத்தல் வேண்டும். அன்றி என்பதிலுள்ள
இகரம் உகரமாகத் திரிய வேண்டியதின்று. அது பிற்காலத் திரிபு
போலும்.
இன்றி என்ற வினையெச்சம் ‘விருந்தின்றிக் கழிந்த பகல்’, என்றாற்
போல, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். அஃது ‘இன்று’ என
வினைமுற்றுப் போல ஈறுதிரிந்த வடிவம் கொண்டவழி, வருமொழி வன்கணம் மிகாது
இன்னோசை பயத்தலின், செய்யுளில் பயில வழங்கப்பட்டது. அந்நிலை ‘அன்றி’
என்பதற்கும் பின்னர் ஏற்பட்டது.
வருமாறு : நாளன்றிப் போகி –
‘
நாளன்று போகி’
(புறநா. 124)
உப்பின்றிப் புற்கை உண்க –
‘
உப்பின்று புற்கை உண்க’
(
தொ. எ. 237 நச்.)