அன்மொழித்தொகை

தொக்க இருமொழியும் அல்லாத அன்மொழி மறைந்து நின்று பொருளைவெளிப்படுப்பது அன்மொழித்தொகை. இவ்வன்மொழித் தொகை, வேற்றுமைத்தொகை -வினைத் தொகை – பண்புத் தொகை – உவமத்தொகை – உம்மைத்தொகை – என்றதொகைகளின் புறத்து வரும்.இவ்வன்மொழித்தொகையும் இருபெயரொட்டாகுபெயரும் ஒன்று என்பர் சிலர்;வெவ்வேறு என்பர் சிலர்.வினைத்தொகையும் உவமத்தொகையும் பிறந்து அவற்றின் புறத்தேஅன்மொழித்தொகை பிறக்கும் என்று தொல்காப் பியனார் வெளிப்படையாகக்கூறவில்லை; பண்புத்தொகை உம்மைத் தொகை வேற்றுமைத்தொகை – என்னும்இவற்றின் ஈற்றில் நின்று இயலும் அன்மொழித்தொகை என்றே கூறுகிறார். (418நச்.)இவ்வன்மொழித்தொகையை விட்ட அன்மொழித்தொகை, விடாத அன்மொழித்தொகை -எனப் பகுப்பர் சிவஞான முனிவர். (சூ.வி.)‘கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்’ (குறள் 570) – இதன்கண் கடுங்கோல்: அன்மொழித்தொகை; கோலின் கடுமை அரசன் மேல் நின்றது. ஆதலின் இதுபண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.‘தகரஞாழல் பூசினார்’ – தகரஞாழல்: இவையிற்றை உறுப் பாக அமைக்கப்பட்டசாந்தினையும் தகரஞாழல் என்ப ஆதலின் அன்மொழித்தொகை ஆயிற்று.‘தூணிப்பதக்கு: அளவிற்குப் பெயராதலின்றி அளக்கப்படும் பொருளுக்குப்பெயராயவழி அன்மொழித்தொகையாம். (தூணியும் பதக்கும்) இவை உம்மை பற்றிவந்தன.பொற்றொடி என்பது வேற்றுமைத்தொகை; பொற்றொடி வந்தாள் – எனஅதனையுடையாட்குப் பெயராகியவழி (வேற் றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த)அன்மொழித் தொகை யாம். பொன், தொடியையுடையாளது செல்வத்தைக் காட்டுதலின், இவ்விரண்டு சொல்லும் அதனையுடை யாளைக் குறித் தவாறும் அறிக.துடியிடை : துடி இடையை விசேடித்தலன்றி, உடையாளை விசேடியாது.தாழ்குழல் : ‘தாழ்ச்சி’ குழலை விசேடிக்குமேயன்றி உடை யாளைவிசேடியாது. ஆதலின் இவ்விரண்டன் புறத்தும் அன்மொழித்தொகை பிறவாது. இவைஇருபெயரொட்டு ஆகுபெயராம். (தொ. சொ. 413 தெய். உரை)குறிப்பால் பொருள் தரும் தொடர்களில் அன்மொழித் தொகையும் ஒன்று.வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத் தொகைமொழிகளுக்கும் புறத்தே அவையல்லாதபுறமொழி களாகிய உருபு தொகுதல் அன்மொழித் தொகையாம்.எ-டு : பூங்குழல் – தாழ்குழல் – கருங்குழல் – துடியிடை – தகரஞாழல்எனவரும். இவை விரிவுழி, பூவையுடைய குழலினை யுடை யாள் – தாழ்ந்தகுழலினை யுடையாள் – கருமையாகிய கூந்தலை யுடையாள் – துடியன்ன இடையினையுடையாள்- தகரமும் ஞாழலும் விராய்ச் சமைந்த சாந்து – என விரியும்.(நன். 269, 369 சங்.)