அன்மொழித்தொகை என்பதற்குப் பொருள், குறிக்கப்படு பொருளுக்கு அல்லாதமொழி எனவும், அப்பொருள் தொக்கு நிற்றலின் தொகை எனவும் கொண்டு,குறிக்கப்படு பொருளுக்கு அல்லாத மொழியில் அப் பொருள் தொக்கு நிற்பதுஎன்பதே சிறந்து காட்டிற்று. இனிப் பயனிலைக்கு அல்லாத மொழி அன்மொழிஎனவும், அப்பயனிலைக்கு உரிய பொருள் அதனில் தொக்கு நிற்றலின் தொகைஎனவும் கொண்டு அன்மொழித்தொகை எனப்பட்டது எனினும் அமையும். (நன். 410இராமா.)