முன்னர் அன்மொழியான் உணரும் பொருள்களை மனத்தான் உணர்ந்துதான்பின்னர்ப் பண்புத்தொகை முதலியவற்றான் கூறக் கருதியவழி, அத்தொகைகளின்இறுதிச் சொற்கண் எழுந்து படுத்தலோசையான் அத்தொகைச் சொல் தோன்றிப்பொருள் விளக்குதலின், அன்மொழித் தொகை ஈற்று நின்று இயலுவதாயிற்று.எ-டு : வெள்ளாடை – தகரஞாழல் – பொற்றொடிஇவை வெள்ளாடை உடுத்தாள் – தகரஞாழல் பூசினாள் – பொற்றொடி தொட்டாள் -என இறுதிச்சொற்கண் எழுந்து படுத்தலோசையான் தொகை தோன்றியவாறு.(தொ. சொ. 418 நச். உரை)