அன்மொழிக்கு அன்மொழி

‘தகர ஞாழல்’ என்ற தொடர் தகரமும் ஞாழலும் கூட்டி அமைத்த சாந்து என்றபொருளில் அன்மொழித்தொகை யாகிப் பின்னர் அச்சாந்தைப் பூசினவள் என்றுபொருள் பட்டு அன்மொழிக்கு அன்மொழி ஆயிற்று. வடமொழியில், துவிரேபம்என்பது இரண்டு ரகரங்களைக் கொண்ட சொல் என அன்மொழித்தொகையாகிப் பின்னர்அத்தகைய சொல் லான பிரமரத்தை – வண்டினை-க் குறித்தலால் இஃது அன்மொழிக்கு அன்மொழியாம். (பி.வி. 24)