அன்மை முதலியன பண்பும் குறிப்பும்ஆதல்

பண்பு – ஒரு பொருள் தோன்றுங்காலத்து உடன்தோன்றி அது கெடும்துணையும்நிற்பது. குறிப்பு – பொருட்குப் பின்னர்த் தோன்றிச் சிறிது பொழுதுநிகழ்வது.எப்பொருளும் அல்லன் இறைவன் – பண்பு.அவன்தான் இவன் அல்லன் – குறிப்பு.எவ்வுயிர்க்கண்ணும் இறைவன் உளன் – பண்பு.மாற்றார் பாசறை மன்னன் உளன் – குறிப்பு.பொய்யர் நெஞ்சில் புனிதன் இலன் – பண்பு.மாற்றார் பாசறை மன்னன் இலன் – குறிப்பு.மெய் வலியன் (வன்மை) – பண்பு.‘சொலல் வல்லன்’ (வல்லுதல்) – குறிப்பு.(தொ. சொ. 216 நச். உரை)