ஆண்மகன் என்று துணிந்தவழி, பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் எனவும்,பெண்டாட்டி என்று துணிந்தவழி ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி எனவும்,குற்றி என்று துணிந்தவழி மகனன்று குற்றி எனவும், மகன் என்று துணிந்தவழி குற்றி அல்லன் மகன் எனவும், பல என்று துணிந்தவழி ஒன்று அல்ல பலஎனவும், ஒன்று என்று துணிந்தவழி பல அன்று ஒன்று எனவும், துணியப்பட்டபொருள்மேல் அன்மைத்தன்மை வைத்துக் கூறுக. . (தொ. சொ. 25 கல். உரை)நச்சினார்க்கினியரும் இவ்வாறே கொள்வர். (25)