‘அன்மைக் கிளவி’

பால்ஐயத்தையும் திணைஐயத்தையும் துணிந்து கூறும்வழி, அவற்றிற்குஅன்மைத்தன்மை ஏற்றிக் கூறுதல் மரபு. ஒரு பொருள் ஒரு பொருளன்றாம்தன்மையை உணர்த்தும் சொல், ஐயத்துக்கு வேறாய்த் துணிந்து கொள்ளப்பட்டபொருளின்- கண்ணது.அன்மைக்கிளவி துணிபொருட்கண் வருவதற்கு எடுத்துக் காட்டு :இவன் பெண்டாட்டி அல்லன், ஆண்மகன்.இவள் ஆண்மகன் அல்லள், பெண்டாட்டி.இவன் குற்றி அல்லன், மகன்.இவ்வுரு மகன் அன்று, குற்றி.இப்பெற்றம் பல அன்று, ஒன்று.இப்பெற்றம் ஒன்று அல்ல, பல.இவன் என்னும் எழுவாய் அல்லன் என்பதனொடு முடிந்தது; ஆண்மகன் என்பதுஇவன் என்னும் சுட்டுப் பெயர்க்குப் பெயர்ப் பயனிலையாய் நின்றது.பெண்டாட்டியின் அல்லன் – என ஐந்தனுருபு விரித்தலும் ஆம்.(பெண்டாட்டியின் நீங்கிய அன்மைத் தன்மையுடையவன்.) (தொ. சொ. 25 நச்.உரை)அன்மைக்கிளவி மறுக்கப்படும் பொருள்மேல் ஆம் என்று கூறிச்சேனாவரையர் ஆண்மகன் அல்லன், பெண்டாட்டி; பெண்டாட்டி அல்லள், ஆண்மகன் -என்று உதாரணம் காட்டுவர். இத்தொடருக்கு ‘இவ்வுருபு ஆண்மகன் அல்லன்,பெண்டாட்டி’ – என உருபு என்ற சொல் காட்டியே பொருள் உரைக்க வேண்டும்.உருபு என்னும் அஃறிணைப்பெயர் அல்லன் அல்லள் என்ற உயர்திணையொடுமுடியாது.இவள் ஆண்மகன் அல்லன், பெண்டாட்டி; இவன் பெண் டாட்டி அல்லள்,ஆண்மகன் – என்று சுட்டுப்பெயர் கூட்டி னும் வாக்கியம் பிழையறமுடியாது. ‘குற்றியோ மகனோ?’ என்று ஐயுற்று மகன் என்று துணிந்தவழி,குற்றித்தன்மை ஆண்டு இல்லை. ஆண்டு இல்லாத குற்றித்தன்மையன்அல்லன் மகன்ஆதலின், அஃது அல்லாதான்மேல் அன்மை ஏற்றலே ஆசிரியர் கருத்தாம். ஆதலின்அன்மைச்சொல் துணியப்பட்ட சொல்மேல் ஏற்றப்படுதலே சிறப்பு. (தொ. சொ. 25நச். உரை)