துணியப்பட்ட பொருளின் வேறாகிய பொருட்கண் வரும் அன்மைக்கிளவிதுணியப்பட்ட பொருளைச் சுட்டல் உரித்து. தன்மை அப்பொருட்கு இயல்புஎனவே, தன்மை சுட்டல் துணியப்பட்ட பொருட்கண் ஆயிற்று.மகன் என்று துணிந்தவழிக் குற்றியல்லன், மகன் என்க.குற்றி என்று துணிந்தவழி மகனன்று, குற்றி என்க.ஆண்மகன் என்று துணிந்தவழிப் பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் என்க.பெண்டாட்டி என்று துணிந்தவழி ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி என்க.பல என்று துணிந்தவழி ஒன்று அல்ல, பல என்க.ஒன்று என்று துணிந்தவழிப் பல அன்று, ஒன்று என்க.துணியப்பட்ட பொருட்கு வேறாகிய பொருட்கண் அன்மைக் கிளவி வரும் என்றசேனாவரையர் கருத்தே இவர்க்குப் பெரிதும் உடன்படாம் என்பது இவருரையின்இறுதிப் பகுதியால் புலப்படும். (தொ. சொ. 25 தெய். உரை)