பொருள்களைத் துணிவது பற்றி இ. கொ. மூன்று வகை கூறும். அவையாவனபொருளைப் பொருள் எனல், பொரு ளல்ல தனைப் பொருள் எனல், இது பொருளன்றுஎன்று அறிந்தும் இதுவே பொருள் எனல் – என்பன. இவற்றுள் முன் னதும்பின்னதும் வழு அல்ல; நடுவிலுள்ளது வழுவேயாம்.இதற்குப் புறனடையாக அன்பு முதலியவற்றால் துணியும் திறனும் முன்கூறிய மூன்றனுள் அடங்கும் என்றார். (இ. கொ. 122, 123.)பொருளல்லதனைப் பொருள் என்றல் அறியாமையால் துணிதல். பொருளைப் பொருள்எனல் அறிவால் துணிதல். ஏனையது அன்பு அருள் ஆசை என்னும் இவை காரணமாகத்துணிதல்.