‘அன்ன மரபின் காலம் கண்ணிய’ கிளவி

‘அன்ன மரபின் காலம் கண்ணிய கிளவி’ எனவே, பான் – பாக்கு – வான் -வாக்கு என்பனவும் கொள்ளப்படும்.எ-டு : ‘அலைப்பான் பிறிதுயிரைஆக்கலும் கு ற்றம்’ (நான்மணி.28)‘புணர்தரு செல்வம் தருபாக்குச்செ ன்றார்’ (கார். 11)‘கொள்வான் கொடித்தானைகொண்டெழுந்தான்’ (பு. வெ . 99)கொள்வாக்கு வந்தான்என இவ்விகுதி ஈற்று வினைச்சொற்கள் எதிர்காலம் காட்டின.(தொ. சொ. 231 நச். உரை)