‘அன்ன பிறவும்’ என்பதனால் வரும்விரவுப்பெயர்கள்

பிராயம் பற்றியும் இடம் பற்றியும் தொழில் பற்றியும் வரும் பெயர்கள்விரவுப்பெயராம். (முறையே முதியான் வந்தான், வந்தது எனவும்; நிலத்தான்வந்தான், வந்தது எனவும்; சுமையான் வந்தான், வந்தது எனவும் காண்க.)(தொ. சொ. 170 தெய். உரை)