‘அன்ன பிறவும்’ எனப்பட்ட அஃறிணைப்பெயர்கள்

ஆ நாய் கழுதை ஒட்டகம் புலி புல்வாய் – எனச் சாதி பற்றி வருவன,நிலம் நீர் தீ வளி ஆகாயம் – எனப் பூதப் பெயராகி வருவன, உண்டல் தின்றல்- முதலாகப் பால் காட்டாத தொழிற் பெயராகி வருவன, கருமை செம்மை முதலாகப்பால் காட் டாத பண்புப்பெயராகி வருவன, மற்றையது மற்றையன பிறிது பிற -என்பனவும், பிறவும் ஆம். (தொ. சொ. 173 கல். உரை)