அன்ஈறு ‘ஆ’வாகத் திரிந்து விளியேற்கும்.எ-டு : துறைவன் – துறைவா, ஊரன் – ஊராஅண்மைவிளிக்கண் ஈறு கெட்டு அகர ஈற்றதாக விளியேற்கும்.எ-டு : துறைவன் – துறைவ, ஊரன் – ஊரமுறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்கும்.எ-டு : மகன் – மகனே, மருமகன் – மருமகனேஅவன் இவன் உவன் – என்ற சுட்டுப்பெயர்களும் யாவன் என்றவினாப்பெயரும் விளியேலா. (தொ. சொ. 130,131, 136, 137 சேனா. உரை)