முன்னர்க் கூறியதனைப் பின்னுமொரு பயன்கருதி வழி மொழிதல்.
‘
ணன முன்னும் வஃகான் மிசையும் மக்
குறுகு
ம்’
(நன். 96) என்று முன்னர்க்
கூறியதனை,
‘லளமெய் திரிந்த னணமுன் மகாரம்
நைந்தீர் ஒற்றாம் செய்யு ளுள்ளே’
என அனுவதித்தார்.
இவ்வநுவாதத்தின் பயன் : மகரம் குறுகுதற்குத் தொடரும் னகரமும்
ணகரமும் முறையே லகரமும் ளகரமும் திரிந்தன என்பதும், இம்
மகரக்குறுக்கம் செய்யுட்கண்ணது என்பதும் உணர்த்துதல். (நன். 120.
சங்கர.)
‘அநுவாதம்’ காண்க.