இனஎழுத்தால் வரும் மோனைத்தொடை; ‘அனு எழுத்து’க் காண்க.அ ஆ ஐ, ஒள; – இவை தம்முள் ஒத்த அனுமோனை.இ, ஈ, எ, ஏ; – இவை தம்முள் ஒத்த அனுமோனை.உ, ஊ, ஒ, ஓ – இவை தம்முள் ஒத்த அனுமோனை.ஞ, ந; – இவை தம்முள் ஒத்த அனுமோனை.ம, வ; – இவை தம்முள் ஒத்த அனுமோனை.ச, த – இவை தம்முள் ஒத்த அனுமோனை.(யா. கா. 43 உரை)