அந்தில் என்ற இடைச்சொல், ஆங்கு என்னும் இடப் பொருளை உணர்த்தலும்,அசைநிலைச் சொல் ஆதலும் என்னும் ஈரியல்பினை உடையது.எ-டு : ‘வருமே, சேயிழை அந்தில் கொழுநற் காணிய, இடம். (குறுந். 293) – ‘அந்தில் கச்சின ன் கழலினன்’ (அக. 76) – அசைநிலை (தொ. சொ. 269 நச்., 267 சேனா.உரை)