1) அந்தாதித்தொடை; அடிதோறும் – இறுதிக்கண் நின்ற எழுத்தானும்அசையானும் சீரானும் அடியானும் மற்றை அடிக்கு ஆதியாகத் தொடுப்பது. (யா.கா.7)2) ஒரு பிரபந்தம் ‘அந்தாதி மேலிட் டறிவித்தேன்’ (திவ். இயற். -நான். 1) இது பதிற்றந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, நூற்றந்தாதிஎன்றாற்போலத் தன்கண் அமைந்த பாடல் எண்ணிக்கை கொண்டு பெயரிடப்படும்.அந்தாதிப் பிரபந் தத்துக்கு வெண்பாவும் கட்டளைக்கலித்துறையுமேசிறப்பாக உரிமையுடையன. (இ. வி. பாட். 82, வெண். பாட். செய். 9)