முதலும் ஈறும் ஒருசொல்லாய் இடையிடைப் பலசொல்லாய் நிகழ்ந்த அந்தாதிமடக்கு எனவும், ஒரு சொல்லே முதலும் இறுதியும் ஒவ்வோரடியிலும் நிகழ்ந்தஅந்தாதி மடக்கென வும் அந்தாதி மடக்கு இருவகைத்து.எ-டு : ‘தேனே கமழ்நறுந் திருமகிழ் மாறன்மாறன் சேவடி வணங்கிறை! வரைவாய்;வரைவாய் அன்றெனில் வல்லைநீ இறைவா!இறைவால் வளையைநீப் பினும்வருந் தேனே!’“தேன்கமழும் நறிய மகிழம்பூமாலையை அணிந்த சடகோபன் புகழும் திருமால்அடியை வணங்கும் தலைவ! நீ இவளை மணந்து கொள்வாய். விரைவில்மணக்கவில்லையெனில், நீ இவளை உடன்கொண்டு சென்றாலும் வருந்தேன்; அல்லதுநீ சிலநாள் குறியிடை வருதல் தவிர்ந்தாலும் வருந்தேன்” என்பதுபொருள்.‘மால் தன் சேவடி வணங்கு இறை! வல்லைநீ வரைவாய். அன்றெனின் இறைவா!வளையலை அணிந்தாளொடு நீப்பினும் வருந்தேன்’ என்று பொருள் கொள்க.முதலும் ஈறும் ‘தேனே’ என்ற சொற்கள் வர, அடிதோறும் வேற்றுச் சொற்கள்அந்தாதியாக வந்தவாறு.இதன் இரண்டாம் வகை ‘சந்தொட்டியமகம்’ எனப்படும் அது காண்க.எ-டு : ‘நாகமுற்றவும்’ (மா. அ. 266, பா.751)