அடிதோறும் இறுதிக்கண் நின்ற எழுத்தானும் அசையானும் சீரானும்அடியானும் மற்றை அடிக்கு ஆதியாகத் தொடுப்பது அந்தாதித் தொடையாம்.எ-டு :‘ உல குடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர் மதிமதி நலன் அழிக்கும் வளங்கெழு முக் குடைமுக்குடை நீழல் பொற்புடை ஆசனம்ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்ஆசனத் திருந்த திருந்தொளிஅறிவனைஅறிவு சேர் உள்ளமோ டருந்தவம் புரிந்துது ன்னிய மாந்தர தென்பப ன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே ’எழுத்து முதலிய நால்வகையானும் அந்தாதித்தொடை நிகழ்ந்தஇச்செய்யுட்கண், முதலடி முதற்சீரும் இறுதியடி ஈற்றுச்சீரும்ஒன்றிவந்தமையால் இத்தொடை மண்டலித்து வந்தது எனப்படும். (யா. கா.17)