ணிச் என்பது பிறவினை விகுதியாகும். அந்தர்ப்பாவிதம் என்பது மறைதல்
என்னும் பொருளது. எனவே, அந்தர்ப்பா- விதணிச் என்பது பிறவினைவிகுதி
மறைந்திருப்பதாம்.
தெரிவித்து என்ற சொல்லில் பிறவினையைக் காட்டும் விவ் விகுதி
வெளிப்படையாக உள்ளது. தெரிந்து என்ற சொல் தெரிவித்து என்று பொருள்
தருமிடத்துப் பிறவினை விகுதி மறைந்துள்ளது.
தபு என்பது ‘நீ சா’ என்ற பொருளில் தன்வினையாம்; ‘நீ ஒன்றனைச்
சாவப்பண்ணு’ என்ற பொருளில் பிறவினையாம்; பிறவினைப் பொருளில்
‘தபு
வி’ என்பதன்கண் உள்ள பிறவினை
விகுதி மறைந்து வந்தது. அஃது அந்தர்ப்பாவித ணிச் என்பர் பிரயோகவிவேக
நூலார். அவரைப் பின்பற்றிச் சிவஞான முனிவரும், “தெரிவித்து எனற்பாலது
‘தெரிந்து’ என வந்தமை அந்தர்ப்பாவித ணிச் ஆகிய பிறவினை விகுதி தொக்கு
நிற்றல்” என்றார். (பா. வி. சிவ. பக். 10).
அந்தர்ப்பாவித ணிச் என்பது தமிழ்மரபுக்கு ஏலாது என்பதை அரசஞ்
சண்முகனார் விளக்கிக் கூறியுள்ளார். (பா. வி. பக். 218 – 220)