ணிச் என்பது பிறவினை விகுதி; பிறவினை விகுதி மறைந்து நிற்றல்இது.எ-டு : கோழி கூவிப் போது புலர்ந்தது – என்புழிக் கூவி என்-பதனைக் கூவுவித்து எனப் பிறவினையாக்கிப் பொருள்கொள்ளுதல் ஆம். ‘யானைஒடித்துண்டு எஞ்சிய யா (குறுந். 232) என்புழி ‘எஞ்சிய’ என்ப- தனைஎஞ்சுவித்த எனப் பிறவினையாக்கிப் பொருள் கொள்ளுதல் ஆம். ‘குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்’ (குறள் 171) என்புழிப் ‘பொன்றி’ என்பதற்குப்பொன்றச்செய்து என்று பிறவினை யாக்கிப் பொருள் கொள்ளப்படும். அவ்வாறுபொருள் கொண்டார் பரிமேலழகர்.இவ்வெடுத்துக்காட்டுக்களில் பிறவினை விகுதி மறைந்து நிற்றல் காண்க.(பி. வி. 39)