தெய்வமும் பேடும் ஆகிய அவ்விருவகையும், நரகர் – அலி -மகண்மா-முதலியவையும் தம் பொருள் அறிய நிற்கும் ஈற்றெழுத்தினையுடையஅல்லவாயினும், உயர்திணைக்குரிய பாலாய் வேறுபட்டிசைக்கும்.வருமாறு :தேவன் வந்தான் – தேவி வந்தாள் – தேவர்வந்தார்; பேடன் வந்தான் -பேடி வந்தாள் – பேடர் வந்தார்; நரகன் வந்தான் – நரகி வந்தாள் – நரகர்வந்தார்; அலி வந்தான் – அலி வந்தாள் – அலியர் வந்தார்; மகண்மாவந்தாள்; பேடு வந்தது – பேடுகள் வந்தன; தேவன்மார் – தேவர்கள் ;தேவியர் – தேவிமார் – தேவிகள் ; பேடன்மார் – பேடர்கள் – பேடியர் -பேடிமார் – பேடிகள் – என்றாற் போல் வருவனவும் கொள்க. (இ.வி. 165)