முன்னர்க் கூறப்பட்ட ஒருசெய்தியையே பின்னரும் பிறிதொரு காரணம்
பற்றி எடுத்துக்கூறுதல் கூறியது கூறல் என்ற குற்ற மாகாது, அநுவாதம்
என்னும் வழிமொழிதலாய் அடங்கும்.
எ-டு : ‘
அன் ஆன் அள் ஆள் அர் ஆர்
பம்மார்
அஆ குடு துறு என் ஏன் அல்
அன்’ (நன். 140).
என, அன் என்பதனைப் படர்க்கை ஆண்பால் விகுதியாதல் காரணத்தால்
முன்னர்க் கூறித் தன்மையொருமை விகுதி யாதல் காரணத்தால் பின்னரும்
கூறுதல் கூறியது கூறல் என்னும் குற்றமாகாது, வழிமொழிதல் என்னும்
அநுவாத மாம்.
‘கூறின பின்னும் கூறின சில; அவை
அநுவாதம் என்றே அறிந்தே அடக்குக’
என்னும்
இலக்கண
க் கொத்து 7 உரையினை
நோக்குக.