விருப்பாய் ஏற்றல். நான்காவது வேற்றுமைப் பொருளாகிய கொடைகொள்வோனால் அனுமதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுதல். இஃது ஆர்வக்கோளிஎனப்படும். (வீ. சோ.)எ-டு : ஆசிரியன் மாணாக்கனுக்குக் கசையடி கொடுத் தான் – இதுமாணாக்கன் திருந்துதல் வேண்டும் என்று விரும்பிக் கொடுத்தமையானும்,மாணாக் கனும் தன்னலம் கருதி அதனை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டமையானும்இப்பெயர் பெற்றது. (பி. வி. 13)